பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய இஸ்லாமிய பெண்ணுக்கு நடந்த அவலம்

ஜார்க்கண்டில் பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய இஸ்லாமிய பெண்ணை 12க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் சிறுபான்மை பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ள இஸ்லாமிய பெண் ஒருவர் அக்கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண், தனது மகள் மற்றும் கணவர் ஆகியோருடன் தங்களது வீட்டில் இருந்த போது உள்ளே புகுந்த அந்த கும்பல் அவரது கணவரை கட்டிப்போட்டதுடன், மகளையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
பின்னர் அவரை 12க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அப்பெண் தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை உயரதிகாரியான அனுராக் குப்தா இது குறித்து கருத்து தெரிவிக்கையில், விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் உள்ளதா என்பது குறித்து உடனடியாக எதுவும் கூறமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.

0 comments

Leave a Reply