
இந்தியாவில் உள்ள ஒரே கொரில்லா இன குரங்கான "போலோ" தனது 43 வயதில் நேற்று முன் தினம் மரணமடைந்தது. மைசூர் வனவிலங்குகள் பூங்காவில் வாழ்ந்து வந்த இந்த கொரில்லா சுவாச தொற்று காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் பலவீனமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் கொரில்லா மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதங்களாக சுவாச தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த போலோவின் உடல்நிலை சற்று தேரி வந்த நிலையில் மீண்டும் கடந்த 15 நாட்களுக்கு முன் மோசமான நிலைக்கு சென்றதாக மைசூர் வனவிலங்குகள் பூங்காவின் துணை இயக்குனரான சுரேஷ் குமார் கூறியுள்ளார்.
0 comments