
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ அதிகாரி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சென்னையைச் சேர்ந்த ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜன் வீரமரணம் அடைந்தார். சோபியான் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பிடிக்க 2 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தேடுதலை தடுக்க ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மேஜர் வரதராஜன், விக்ரம்சிங் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
0 comments