
தேர்தல் பரப்புரைகளில் நரேந்திரமோடி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திவருவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிய ராகுல், கடந்த பத்து ஆண்டுகளில் ஒருமுறைக்கூட எதிர்கட்சிகள் மீது பிரதமர் மன்மோகன் சிங் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார். அதே போல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் எதிர்கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யும் போது மரியாதையுடன் விமர்சிப்பதாக தெரிவித்தார். குஜராத் மாநிலத்தவர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்று தெரிவித்த ராகுல், அம்மாநில வளர்ச்சிக்கு மோடி மட்டுமே காரணம் என்று பரப்புரை செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
0 comments